இந்து சமய அறநிலையத்துறை ரூ. 39,000 சம்பளத்தில் வேலை

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர் பணியிடம் ஊதியம்
ஓதுவார் 1 ரூ.12,600 - 39,900

கல்வித்தகுதி:

தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். சமய, அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் தேவாரப் பாட சாலையில் 3 ஆண்டுகள் பயின்றமைக்காக வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். நேர்காணல் மூலம் பணிக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உடையவர்கள், கோயில் நிர்வாகத்திடம் இருந்து விண்ணப்பங்களை ரூ.50 செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்துடன் இணைத்து கல்வி சான்றிதழ், சாதிச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்கள் இணைத்து அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 06.06.2023 மாலை 5.45 மணிக்குள் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் அலுவலகத்திற்கு வந்துசேர வேண்டும்.

Tags : இந்துசமயஅறநிலையத்துறை ,   job

திருக்குறள்

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
பொருள்;
அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.

குறைவாக சிந்தியுங்கள், அதிகமாக உணருங்கள்.

ஓஷோ