தமிழ் புத்தாண்டு சுபகிருது வருட வெண்பா பலன்

சுபகிருது புத்தாண்டு குறித்து சித்தர் இடைக்காடர் வெண்பா பலன்.

சுபகிருது தன்னிலே சோழதேசம் பாழ்
அவமாமம் விலைகுறையும் சூன்சாம் சுபமாகும்
நாடெங்கும் மாரிமிகும் நல்லவிளை வுண்டாகும்
கேடெங்கு மில்லையதிற் கேள்

கருத்து: `சுபகிருது ஆண்டில் சோழநாட்டிலே சில பொருள்கள் வீணாகிப் பாழாகும். மண்பாண்டங்களின் விலை குறையும். மழை நன்கு பெய்து விளைச்சல் உண்டாகும். மழையினால் வேறு எந்த கேடும் இல்லை’ என்கிறது இந்த வெண்பா.

சுபகிருது - பஞ்சாங்கம்
நவ நாயகர்களின் நிலை...

சனி - ராஜ்ஜியாதிபதி, நீரஸாதிபதி

புதன் -அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதி.

குரு - மந்திரி

சூரியன் - ஸஸ்யாதிபதி

செவ்வாய் - ரஸாதிபதி

சுக்கிரன் - தான்யாதிபதி

பசுநாயக்கர் - பலபத்ரன்

Tags : TamilNewYear ,   சுபகிருது ,   இலவசம் ,   தமிழ்புத்தாண்டு

தாமின் புறுவது உலகின் புறக் கண்டு காமுறுவர் கற்றறிந் தார்.
பொருள்;
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

சமூக வலைத் தளங்கள்