நக்ஷத்திரப் பொருத்தம்

புலிப்பாணியின் ஜோதிட நூல்களின் அடிப்படையில் சில நக்ஷத்திரங்களை சில நக்ஷத்திரங்களுடன் கீழ்க்கண்ட வகையில் அமையுமானால் திருமணம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் நக்ஷத்திரப் பொருத்தம் பார்க்கத் தேவை இல்லை. அதன் அடிப்படையில் உங்களுக்கு பயனுள்ள வகையில் ஒரு அட்டவனையை கொடுக்கிறோம். கீழ்க்கண்ட அட்டவணைப் படி நக்ஷத்திரம் அமைந்து இருந்தால் தாரளாமாக திருமணம் செய்யலாம். நக்ஷத்திரப் பொருத்தம் கூடப் பார்த்துக் குழம்பத் தேவை இல்லை. வாருங்கள் அந்த அட்டவணையைப் பார்ப்போம்.

 

எண் பெண் கீழ்க்கண்ட நக்ஷத்திரங்களில் பிறந்திருந்தால் பொருந்தக் கூடிய ஆணின் நக்ஷத்திரம்
1 அசுவினி, மகம், மூலம் பரணி, ரோகிணி, திருவாதிரை , பூசம் , பூரம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி
2 பரணி, பூரம், பூராடம் கிருத்திகை, மிருகஷீர்ஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி , ரேவதி
3 கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதையம், உத்திரட்டாதி,அசுவினி
4 ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் மிருகஷீர்ஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி
5 மிருகஷீர்ஷம், சித்திரை, அவிட்டம் திருவாதிரை, பூசம், மகம், உத்திரம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அசுவினி, கிருத்திகை
6 திருவாதிரை, சுவாதி, சதையம் புனர்பூசம், ஆயில்யம், பூரம், ஹஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி
7 புனர்பூசம், விசாகம், பூரட்டாதி பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அசுவினி, கிருத்திகை, மிருகஷீர்ஷம்
8 பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆயில்யம், பூரம், ஹஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை
9 ஆயில்யம், கேட்டை, ரேவதி மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அசுவனி, கிருத்திகை, மிருகஷீர்ஷம், புனர்பூசம்ை

இதே வகையில் பொருந்தக் கூடிய பெண் நக்ஷத்திரத்தையும் மேற்கண்ட அட்டவணையைப் பயன்படுத்தி மறுபுறத்தில் இருந்து கணக்கிட்டுக் கொள்ளலாம்.

Tags : நக்ஷத்திரப்பொருத்தம் ,   ஜோதிடம் ,   திருமணம்

இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர்.
பொருள்;
சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.

சமூக வலைத் தளங்கள்