ரேசன் அட்டைதாரர் யாருக்கு மாதம் ரூபாய் 1000 கிடைக்கும்?

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை ரேஷன் கார்டு வகைகள் குடும்ப அட்டை எண் விவரம்:தமிழக அரசின் இத்திட்டத்தின் படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு ரூ.1000 வழங்க அரசு திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வருகிறது . அதன்படி பி.எச்.எச். என்ற வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக் கும், பி.எச்.எச்.ஏ.ஏ.ஒய். என்ற அந்த்யோ தயா அன்னயோஜனா ரேசன் அட்டை வைத்திருக்கும் (அதாவது 35 கிலோ அரிசி வாங்குபவர்கள்) நபர்களுக்கு ரூ.1000 கிடைக்கும் என தெரிகிறது .

இதில் வயது வரம்பு மற்றும் கணவரின் ஆண்டு வருமானம் கணக்கிடவும் வாய்ப்பு உள்ளது.

அரசு ஊழியர்கள் உள்ள குடும்பத்துக்கு இந்த 1000 ரூபாய் பணம் வழங்கப்படாது. புதுமைப் பெண் திட்டத்தில் பயன் அடையும் கல்லூரி மாணவிகளில் வறுமைக் கோட்டு கீழ் உள்ள தாயார்கள் இதில் பயன் அடைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

இதில் 60 வயதுக்கு மேற்பட்தவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதில் இந்த திட்டம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனத் தெரிகிறது. 

குடும்பத் தலைவிகளுக்கு தான் உரிமைத் தொகை என்பதால் ரேசன் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது இல்லை. தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் பணம் சென்றடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

நியாய விலை கடை வகைகள் NPHH, PHH,AAY, NPHH-S குடும்ப அட்டை என்றால் என்ன?

PHH (Priority house hold) – முன்னுரிமை உள்ளவர்கள்

  • PHH குடும்ப அட்டை என்றால் என்ன ?- Priority Household என்று பொருள்
  • PHH பிரிவில் உள்ள குடும்ப அட்டைகள் மொத்தமாக தமிழ்நாட்டில் 76,99,940 உள்ளன.
  • PHH எனும் குறியீடு உங்கள் குடும்ப அட்டையில் இருந்தால் ரேஷன் கடையில் மாதத்திற்கு 8 கிலோ அரிசி நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

PHH – AAY Ration Card Meaning Tamil:

PHH – AAY (Priority house hold – Antyodaya Anna Yojana) – வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்

  • PHH- AAY குடும்ப அட்டை என்றால் என்ன ? – Priority house hold – Antyodaya Anna Yojana Card என்று பொருள்.
  • இந்த PHH – AAY எனும் குறியீடு உள்ள குடும்ப அட்டை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.
  • இந்த பிரிவில் உள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி குறைந்த விலையில் வழங்கப்படும்.
  • PHH – AAY பிரிவில் உள்ள குடும்ப அட்டைகள் மொத்தமாக தமிழ்நாட்டில் 18,64,600 உள்ளன.

NPHH Ration Card Meaning Tamil:

NPHH ( Non Priority House Hold) – முன்னுரிமை இல்லாதவர்கள்

  • NPHH குடும்ப அட்டை என்றால் என்ன ? – Non Priority House Hold என்று பொருள்.
  • NPHH எனும் குறியீடு உங்கள் குடும்ப அட்டையில் இருந்தால் ரேஷன் கடையில் அரிசி உட்பட சர்க்கரை மற்றும் அனைத்து பொருள்களும் வாங்க முடியும்.
  • NPHH பிரிவில் உள்ள குடும்ப அட்டைகள் மொத்தமாக தமிழ்நாட்டில் 90,08,842 உள்ளன.

NPHH-S Ration Card Meaning Tamil:

  • NPHH-S எனும் குறியீடு உங்கள் குடும்ப அட்டையில் இருந்தால் ரேஷன் கடையில் அரிசியை தவிர்த்து மற்ற அனைத்து பொருள்களும் வாங்கலாம்.
  • NPHH-S பிரிவில் உள்ள குடும்ப அட்டைகள் மொத்தமாக தமிழ்நாட்டில் 10,01,605 உள்ளன.
  • NPHH-NC Ration Card Meaning Tamil:

NPHH-NC எனும் குறியீடு உங்களுடைய குடும்ப அட்டையில் இருந்தால் நீங்கள் நியாய விலை கடையில் எந்த ஒரு பொருளும் வாங்க இயலாது. குடும்ப அட்டையை நீங்கள் ஏதோ ஒன்றிற்காக அடையாளத்திற்கோ அல்லது முகவரி சான்றாகவோ மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.

Tags : மாதம்ரூ.1000 ,   பெண்களுக்கு ,   தமிழ்நாடு ,   தமிழகம் ,   இலவச

திருக்குறள்

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான் உற்றநாள் உள்ள உளேன்.
பொருள்;
காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?

ஒளியைக் கண்டுபிடியுங்கள், அது உங்களுக்கு பாதையைக் காண்பிக்கும்.

ஓஷோ