அழகுக் குறிப்புகள் ஆண்களுக்காக

பொதுவாக இந்திய ஆண்கள் தங்கள் சருமத்தின் மீது அதிக அக்கறை காட்டிக் கொள்ளமாட்டார்கள். இதனால் தான் அவர்களுக்கு சருமத்தில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக முகப்பருக்கள், பொலிவிழந்த முகம், சருமத்தில் சுருக்கம் போன்றவை இந்திய ஆண்களின் அழகையும், இளமைத் தோற்றத்தையும் பாதிக்கின்றன. அக்காலத்தில் ஆண்கள் அழகின் மீது அக்கறை காட்டாமல் இருந்ததற்கு காரணம், அவர்களது மாசற்ற சுற்றுச்சூழல் தான். ஆனால் இப்போதோ மாசுக்கள் இல்லாத இடங்களே இல்லை. இதனால் முதலில் பாதிக்கப்படுவது நம் சருமம் தான். ஆகவே இக்காலத்தில் ஆண்கள் தங்கள் சருமத்தின் மீது அக்கறையின்றி இருந்தால், விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெற வேண்டியது தான். இங்கு ஆண்களின் அழகை அதிகரிக்க தினமும் பின்பற்ற வேண்டியது என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் சரும பிரச்சனைகள் வருவதைத் தவிர்க்கலாம். அப்பட்டியல் பின்வருமாறு

சருமத்தின் சிறந்த நண்பன் தண்ணீர் தான். சரும அழகை அதிகரிக்க வேண்டுமானால் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

காற்று மாசுபாட்டினால் சரும செல்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றன. இதனால் முகம் பொலிவிழந்து அசிங்கமாக இருக்கிறது. ஆகவே வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், கெமிக்கல் பொருட்களைக் கொண்டு சருமத்தை பராமரிப்பதைத் தவிர்த்து, இயற்கைப் பொருட்களான கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி தேய்த்து கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுவதும் நீங்குவதோடு, முகத்தில் உள்ள தழும்புகளும் மறைந்து, முகம் அழகாக காட்சியளிக்கும்.

ஓசோன் மண்டலத்தில் விழுந்த ஓட்டையின் காரணமாக சூரியனிடமிருந்து வெளிவரும் கதிர்கள் நேரடியாக சருமத்தை தாக்குகின்றன. இப்படியே சூரியக்கதிர்கள் சருமத்தைத் தாக்கினால், சரும செல்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி சருமம் கருமையாவதோடு, சரும புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். எனவே வெளியே செல்லும் முன் ஆண்கள் சரும செல்களுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் நல்ல SPF சன் ஸ்க்ரீன் லோசனை கை, கால்களுக்கு தடவிக் கொள்ள வேண்டும்.

தினமும் இரண்டு முறை சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டியது அவசியம். இதனால் சருமம் வறட்சியடைவது தடுக்கப்பட்டு, சருமத்தில் வெடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும். அதில் பகலில் நீர்மமான மாய்ஸ்சுரைசரையும், இரவில் அடர்த்தியான மாய்ஸ்சுரைசரையும் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் போதிய நீர்ச்சத்துடன் இருக்கும்.

அடிக்கடி டீ, காபி குடிக்கும் பழக்கத்தைத் தவிர்த்து, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உண்ணும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். இதனால் சருமத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, சரும செல்கள் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். எனவே அழகை அதிகரிக்க விரும்பினால், ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பௌல் சாலட் சாப்பிடுங்கள்.

உணவின் சுவையை அதிகரிக்க உப்பு, சர்க்கரை போன்றவை அவசியம் தான். ஆனால் அதை அளவுக்கு அதிகமாக சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள். குறிப்பாக உப்பை தவிர்த்திடுங்கள். ஏனெனில் உப்பு முகத்தை வீங்கச் செய்யும். எனவே உணவில் அளவாக உப்பை சேர்த்து சாப்பிடுங்கள்.

முக்கியமாக இரவில் 7-8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இந்நேரத்தில் தான் பாதிக்கப்பட்ட சரும செல்கள் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும். ஆனால் அந்த ஓய்வு சரியான அளவில் கிடைக்காவிட்டால், முகம் பொலிவிழந்து தான் காட்சியளிக்கும்.

  • தண்ணீர்
  • நேச்சுரல் ஸ்கரப்
  • சன் ஸ்க்ரீன்
  • நல்ல மாய்ஸ்சுரைசர்
  • பழங்கள் மற்றும் காய்கறிகள்
  • உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்
  • நல்ல தூக்கம்

Tags : அழகுக்குறிப்புகள் ,   ஆண்களுக்காக

திருக்குறள்

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்.
பொருள்;
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும் தருணத்தில், நீங்கள் அழகாக மாறுகிறீர்கள்.

ஓஷோ