Harbhajan Singh appreaciate makkal selvan vijay sethupathi – தமிழ் News


வாரத்திற்கு மூன்று திரைப்படங்கள் ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை ஒரு சினிமா துறவி என கிரிக்கெட் பிரபலம் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் விஜய் சேதுபதி நடித்த ’லாபம்’ ’துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் ரிலீஸான நிலையில் இந்த வாரம் ‘அனபெல்லா சேதுபதி என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சற்று முன்னர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் ’பிரண்ட்ஷிப்’ படத்தில் ஸ்னீக்பிக் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியிட்டதற்கு விஜய்சேதுபதிக்கு நன்றி தெரிவித்த அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடித்தவரும் கிரிக்கெட் பிரபலமான ஹர்பஜன்சிங், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சேது ஜி விஜய்சேதுபதி ரொம்ப நன்றி.” ஒரு வாரத்துக்கு 3 படம் கொடுக்கும் நீங்கள் ஓய்வு என்னும் வார்த்தையை உதறிய சினிமா துறவி”. உங்கள் உழைப்பு! முயற்சி! ஆளுமை! மனிதர்களை மதிக்கும் குணம்! தலைகனம் இல்லா பண்பு! எல்லாம் தாரு மாரு.நடிப்பு அரக்கன்னா சும்மாவா. பஜ்ஜி ஹாப்பி அண்ணாச்சி! என்று பதிவு செய்துள்ளார். ஹர்பஜன் சிங்கின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.


 





Source link

Related Posts