வெற்றிமாறன், விஜய் சேதுபதி, பாண்டிராஜை தமிழில் புகழ்ந்த ஹர்பஜன் சிங்!


இயக்குநர்கள் வெற்றி மாறன், பாண்டிராஜ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோரை புகழ்ந்து தமிழில் ட்வீட் செய்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நாயகனாக நடித்துள்ள படம் ‘பிரண்ட்ஷிப்’. இந்தப் படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

இதில் அர்ஜுன், சதீஷ், லாஸ்லியா உள்ளிட்ட பலர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்காகக் காத்திருந்தது. ஓடிடிக்குப் பேச்சுவார்த்தை நடத்தினாலும், திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் வெளியீட்டு எண்ணத்தை மாற்றிய படக்குழு, படத்தை செப்டம்பர் 17-ம் தேதி ‘பிரண்ட்ஷிப்’ படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தில் முதல் 10 நிமிட ஸ்னீக் பீக் வீடியோவை இயக்குநர்கள் வெற்றிமாறன், பாண்டிராஜ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்டனர். இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழில் ட்வீட் செய்திருந்தார் ஹர்பஜன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து ஹர்பஜனின் ட்வீட்டுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Source link

Related Posts