வாழ் படத்தின் வெற்றியை தொடர்ந்து Sony Liv ல் அடுத்ததாக “திட்டம் இரண்டு”? | Sony Liv’s next big plan to boost more movies


நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

தமிழில் வாழ், கசட தபற, கடைசி விவசாயி, நரகாசூரன் ஆகிய படங்கள் Sony Liv ல் நேரடியாக வெளியாகவுள்ளது என முன்னரே தகவல்கள் வெளியாகின. அதன் படி வாழ் திரைப்படம் நேரடியாக Sony Liv ல் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஜூலை தொடக்கத்தில்

ஜூலை தொடக்கத்தில்

ஆனால் ஜூலை மாதம் தொடக்கத்திலேயே நரகாசூரன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பாராத வகையில் வாழ் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வர இம்மாத இறுதியில் நரகாசூரன் வெளியாகும் என பேசப்பட்டது. தற்போது அதுவும் பலிக்கவில்லை என தெரிகிறது.

நேரடி வெளியீடு

நேரடி வெளியீடு

நரகாசூரன் ஆகஸ்ட் ரிலீசுக்கு தள்ளிப்போவதாக சொல்லப்படுகிறது. அதற்கு பதிலாக Sony Liv ல் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் வெளியாக உள்ளதாக பேசப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இம்மாதம் 30ம் தேதி திட்டம் இரண்டு திரைப்படம் நேரடியாக Sony Liv ல் வெளிவரவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நரகாசூரன், கடைசி விவசாயி அடுத்த மாத OTT ரிலீசுக்கு தள்ளி போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.Source link

You may have missed