பிவி சிந்து வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இந்த பிரபல நடிகையா?


சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பிவி சிந்துவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிவி சிந்துவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது தன்னுடைய கேரக்டரில் தீபிகா படுகோன் நடிக்க வேண்டும் என்றும் அவர் ஒரு பேட்மிட்டன் வீராங்கனை என்பதால் அவருக்கு என்னுடைய கேரக்டர் சரியாக பொருந்தும் என்றும் பிசி சிந்து கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று தீபிகா படுகோனே, பிவி சிந்து மற்றும் தீபிகா படுகோனின் கணவர் ரன்வீர் சிங் ஆகியோர் சந்திப்பு நடந்துள்ளது. நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்தச் சந்திப்பின் போது இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் பெற்ற பிவி சிந்துவுக்கு தீபிகா படுகோனே தம்பதிகள் பார்ட்டி வைத்ததாக தகவல்கள் வெளியானது.

இந்த பார்ட்டியின் போது எடுக்கப்பட்ட செல்பி புகைப்படங்களை ரன்வீர் சிங், தீபிகா மற்றும் பிவி சிந்து ஆகியோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த பார்ட்டியின் இடையே பிவி சிந்துவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக்குவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் பிவி சிந்து மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குவதற்கு சரியான இயக்குனர் கிடைத்ததும் இந்த படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தோனி, சச்சின் டெண்டுல்கர், மேரிகோம் உள்பட பல விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் விரைவில் பிவி சிந்துவின் வாழ்க்கை வரலாறும் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Source link

Related Posts