பிரிஸ்பனில் 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி : |


செய்திப்பிரிவு

Published : 22 Jul 2021 03:12 am

Updated : 22 Jul 2021 03:12 am

 

Published : 22 Jul 2021 03:12 AM
Last Updated : 22 Jul 2021 03:12 AM

டோக்கியோ

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 138-வது கூட்டம் டோக்கியோவில் நேற்று நடைபெற்றது. இதில் 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரமாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பனை உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.

இதற்காக நடந்த தேர்தலில் 80 வாக்கு அட்டைகள் வழங்கப்பட்டன. இதில் 72 வாக்குகளை பெற்றது பிரிஸ்பன் நகரம். 5 வாக்குகள் எதிரானவையாக இருந்தது. 3 வாக்கு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக்குழு கடந்த ஜூன் மாதமே பிரிஸ்பனை 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரமாக முன்மொழிய முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

You may have missed