பிஎஸ்என்எல் புதிய பிராட்பேண்ட் திட்டம் | மூன்று மாதங்களுக்கு 1,000 ஜிபி டேட்டா – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online


பிஎஸ்என்எல் ஒரு புதிய இணைய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் விலை ரூ.399 ஆகும். இது “ஃபைபர் எக்ஸ்பீரியன்ஸ்” என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் புதிய பாரத் ஃபைபர் பயனர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது மூன்று மாதங்களுக்கு கிடைக்கும், அதாவது பயனர்கள் 90 நாட்களுக்கு இந்த திட்டத்தின் பயன்களை அனுபவிக்க முடியும்.

“ஃபைபர் எக்ஸ்பீரியன்ஸ்” திட்டம்: விவரங்கள்

பிஎஸ்என்எல் “ஃபைபர் எக்ஸ்பீரியன்ஸ்” FTTH திட்டம் உங்களுக்கு 30 Mbps டவுன்லோடு ஸ்பீடு உடன் 1000 ஜிபி டேட்டா பயன்பாட்டை வழங்கும். இருப்பினும், 1,000 ஜிபி தரவு பயன்படுத்திய பிறகு வேகம் 2 Mbps ஆக குறையும். இந்த திட்டம் தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா மற்றும் குஜராத் வட்டங்களில் கிடைக்கிறது, ஆனால் ஒரு சிக்கல் உள்ளது. ரூ.399 பிராட்பேண்ட் திட்டம் தானாக ரூ.449 திட்டம் ஆக மாறிவிடும். புதிதாக தொடங்கப்பட்ட இணையத் திட்டம் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்பு சேவையை வழங்கும்.

நிறுவனம் இந்த திட்டத்தை 90 நாட்களுக்கு வழங்குகிறது, மேலும் ஆறு மாதங்கள் காலாவதியான பிறகு, வாடிக்கையாளர்கள் தானாகவே ஃபைபர் பேசிக் பேக்கிற்கு மாற்றப்படும். முதலில் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு திட்ட மாற்றம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படும். அதே போல திட்டத்தை பெறும்போதே வாடிக்கையாளர்களின் ஒப்புதலையும் இதற்காக நிறுவனம் பெறுவதாக கூறப்படுகிறது.

அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனம் வழங்கும் திட்டங்களை அருகிலுள்ள வாடிக்கையாளர் மையம் மற்றும் சில்லறை விற்பனையாளர்களைப் பார்வையிட்டு பயனர்கள் தெரிந்துக்கொள்ள முடியும். கூடுதலாக, பயனர்கள் சேவைகளைப் பற்றி அறிந்துக்கொள்ள கட்டணமில்லா எண் ஆன 1800 345 1500 என்பதையு அழைக்கலாம்.

Source link

You may have missed