நடிகர் சூரி வீட்டில் நகை திருடிய ‘பப்ளிசிட்டி திருடன்’ சிக்கியது எப்படி?


பட மூலாதாரம், Actor soori facebook

கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற நடிகர் சூரியின் அண்ணன் வீட்டு திருமண விழாவில் காணாமல்போன 10 சவரன் நகையை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருடியது தெரிய வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.

கைது செய்யப்பட்ட நபர் தனது சுய விளம்பரத்திற்காக முக்கிய பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இவ்வாறு செய்து வருபவர் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

“ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் மணிவாசகம். இவர் பரமக்குடி பஜார் பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் விக்னேஷ். பட்டதாரி இளைஞரான இவர் ஒரு விளம்பர பிரியர். சுய விளம்பரத்திற்காக மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று அங்கு உள்ள சினிமா பிரபலங்கள், முக்கிய நபர்களிடம் நெருங்கிய பழக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளார். குறிப்பாக சினிமா நட்சத்திரங்களுடன் நெருங்கிப் பழகி புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்,” என்று பிபிசியிடம் பேசிய காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய பிரபலங்களின் இல்லங்களில் நடைபெறும் விஷேசங்களில் விக்னேஷ் அழைப்பில்லாமலே கலந்து கொள்வார். அப்படி கலந்து கொள்ளும் விழாக்களில் நகை, பணம் என எதாவது ஒன்றை திருடி தாமாகவே மாட்டி கொள்வார்.Source link

Related Posts