திரையரங்கில் வெளியாகாத டிக்கிலோனா படத்துக்கு சக்சஸ் பார்ட்டி!


டிக்கிலோனா படத்துக்கு சக்சஸ் பார்ட்டி நடத்தியிருக்கிறார்கள் சந்தானமும், படக்குழுவும். 

புரட்சி, வித்தியாசம் என பல வார்த்தைகளை தமிழ் சினிமா அர்த்தமிழக்கச் செய்திருக்கிறது. யார் நடித்தாலும் அவர் புரட்சிகரமான நடிகர், எந்தப் படம் எடுத்தாலும் வித்தியாசமான படம். இதேபோல் அவர்கள் சக்கையாக உமிழ்ந்து வைத்த இன்னொரு விஷயம் சக்சஸ் பார்ட்டி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படம் நூறு நாள் இருநூறு நாள் ஓடிய காலத்தில் வெற்றி விழா கொண்டாடியதில் நியாயம் இருக்கிறது. போட்ட பணம் திருப்பி கிடைத்த மகிழ்ச்சியில் சக்சஸ் பார்ட்டி வைப்பதிலும் தவறு இல்லை. படம் வெளியான மறுநாளே சக்சஸ் மீட், பார்ட்டி என்று கொண்டாடுவதுதான் புரியவில்லை. இப்படி இரண்டாவது நாள் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய பலரும் இரண்டு மாதம் கழித்து, படம் எடுத்து பணம் போச்சு என்று துண்டை தலையில் போட்டு புலம்புவதையும் கேட்டிருக்கிறோம்

திரையரங்கில் வெளியாகிற படத்துக்கு சக்சஸ் பார்ட்டி வைத்தவர்கள் இப்போது ஓடிடியில் படம் வெளியானாலும் ஒரு கேக்கை வெட்டி பார்ட்டி கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த கலாசாரத்தை தொடங்கி வைத்தவர் தனஞ்செயன். திட்டம் இரண்டு சோனிலிவ்வில் வெளியானதும், இதேபோல் ஒரு சக்சஸ் பார்ட்டி ஏற்பாடு செய்தார். அதை டிக்கிலோனா படக்குழு தொடர்ந்திருக்கிறது

டிக்கிலோனாவை திரையரங்கில் வெளியிட ஆள் கிடைக்காமல் ஸீ 5 ஓடிடி தளத்துக்கு தள்ளிவிட்டனர். படம் ரொம்ப சுமார் என்று விமர்சனங்கள் வந்துள்ளன. ஆனால், இவர்களோ படம் சக்சஸ் என்று கேக் வெட்டி பார்ட்டி கொண்டாடியிருக்கிறார்கள். ஓடிடியில் ஒரு படம் வெற்றி பெற்றதை எப்படி அறிந்து கொள்கிறார்கள்? படம் பார்த்தவர்களின் எண்ணிக்கையை வைத்தா

Also read… சமந்தா போட்ட ட்வீட் – சமாதானமடைந்த ரசிகர்கள்!

சக்சஸ் பார்ட்டி வைத்தால், படம் சூப்பர் போலிருக்கு என்று நாலு பேர் படம் பார்ப்பார்கள் என்ற நப்பாசையில் இவர்கள் பார்ட்டி கொண்டாடுவது போலவே தோன்றுகிறது.Source link

Related Posts