சூடு பிடிக்கும் தமிழ் சினிமா – Tamil cinema slightly pickup


சூடு பிடிக்கும் தமிழ் சினிமா

15 செப், 2021 – 11:40 IST

எழுத்தின் அளவு:


கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நான்கு மாதங்கள் மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த மாதம் 23ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. கடந்த வாரம் தான் இரண்டு முக்கிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகின. ஆனால் இரண்டு படங்களுக்கும் பெரிய வரவேற்பு இல்லை என்பது உண்மை.

இதனால் தியேட்டர் வட்டாரங்கள் கொஞ்சம் கலக்கத்துடன் தான் உள்ளன. இருந்தாலும் ஒவ்வொரு வாரமும் இரண்டு புதிய படங்களாவது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் செப்டம்பர் 17ம் தேதி ‘கோடியில் ஒருவன், பிரண்ட்ஷிப்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

அதற்கடுத்த வாரங்களிலும் சில பல புதிய படங்களை வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். அதற்குப் பிறகு அக்டோபர் மாதம் ஆயுத பூஜையை முன்னிட்டு மேலும் சில புதிய படங்களும் வெளியாக உள்ளன.

விஷால், ஆர்யா நடித்துள்ள ‘எனிமி’, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. அதற்கடுத்து நவம்பர் மாதம் தீபாவளிக்கு ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’, சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அஜித் நடித்துள்ள ‘வலிமை’ பட வெளியீட்டுத் தேதியையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தப் படங்கள் மட்டுமல்லாது அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் வாரத்திற்கு இரண்டு படங்ளாவது வெளியாக வாய்ப்புகள் உள்ளது. டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையிலும் சில பெரிய படங்கள் வெளியாகலாம்.

அடுத்தடுத்து புதிய படங்கள் வெளிவர உள்ளதால் அவற்றின் டீசர், டிரைலர், சிங்கிள் வெளியீடு என அப்டேட்களாக வர உள்ளன. இதன் காரணமாக தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

Source link

Related Posts