சவுதி இளவரசரின் சீர்திருத்த முயற்சி: மெக்கா, மெதினா பாதுகாப்பு பணியில் பெண்கள்

மாற்றம் செய்த நாள்: ஜூலை 22,2021

Home
ரியாத்: ‘பழமை வாதத்திலிருந்து விடுபடுவதன் மூலம் சர்வதேச முதலீட்டை ஈர்க்கலாம்’ எனக் கருதும் சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான், தன் நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை ‘விஷன் 2030’ என்ற பெயரில் செய்து வருகிறார்.

அதன்படி, பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் பாதுகாவலர்கள் அனுமதியில்லாமல் பயணம் செய்ய அனுமதி, சொத்துரிமையில் கூடுதல் கட்டுப்பாடு, ராணுவத்தில் பெண் படை போன்றவற்றை அறிவித்தார். அந்த வரிசையில் தற்போது மெக்கா, மெதினா புனிதத் தலங்களின் பாதுகாப்புப் பணியில் பெண் வீராங்கனைகளைப் பணியமர்த்தும் திட்டத்தையும் செயல்படுத்தி உள்ளார்.

‘நாங்கள் இன்று மிகவும் புனிதமான மெக்கா பெரு மசூதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம். புனித யாத்திரிகர்களுக்கு சேவை செய்வது மாண்புமிகு பணி. மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறோம்’ என, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.


Dinamalar iPaper

Source link

You may have missed