கேரள சினிமா விருதுகள்… சிறந்த திரைப்படம் தி கிரேட் இந்தியன் கிச்சன் | Kerala film critics awards 2020 announced


Awards

oi-Mohana Priya S

|

திருவனந்தபுரம் : 2020 ம் ஆண்டிற்கான Kerala Film Critics Awards அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜியோ பேபி பெல்லிசரி இயக்கிய தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் சிறந்த படத்திற்கான விருதினை பெற்றுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருதினை ப்ருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இதே போல் சிறந்த நடிகைக்கான விருதினை சுரபி லட்சுமியும், சம்யுக்தா மேனனும் பெற்றுள்ளனர்.

தேன் படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது...குவியும் பாராட்டுக்கள் தேன் படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது…குவியும் பாராட்டுக்கள்

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு இந்த விருது வழங்கும் விழாவை பிரம்மாண்ட விழாவாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 45 வது கேரள திரைப்பட கிரிட்டிக்ஸ் விருதுகள் வென்றவர்களின் முழு பட்டியலை இங்கே பார்க்கலாம்.

 Kerala film critics awards 2020 announced

விருது பெற்றவர்கள் விபரம் :

 • சிறந்த படம் – தி கிரேட் இந்தியன் கிச்சன்
 • சிறந்த டைரக்டர் – சித்தார்த் சிவா (படம் – என்னிவர்)
 • சிறந்த நடிகர் – ப்ருத்விராஜ், பிஜு மேனன் (அய்யப்பனும் கோஷியும்)
 • சிறந்த நடிகை – சுரபி லட்சுமி (ஜுவாலாமுகி), சம்யுக்தா மேனன் (ஆணும் பெண்ணும், வுல்ஃப், வெல்லம்)
 • இரண்டாவது சிறந்த திரைப்படம் – வெல்லம்
 • இரண்டாவது சிறந்த டைரக்டர் – பிரஜீஷ் சென் (வெல்லம்)
 • சிறந்த துணை நடிகர் – சுதீஷ் (என்னிவர்)
 • சிறந்த துணை நடிகை – மமிதா பைஜு (கோ கோ)
 • சிறந்த குழந்தை நட்சத்திரம் – மாஸ்டர் சித்தார்த் (பூனமி)
 • சிறந்த கதை எழுத்தாளர் – எம்.ஜெயச்சந்திரன் (சுஃபியும் சுஜாதையும்)
 • சிறந்த ஒளிப்பதிவாளர் – அமல் நீரத் (Trance)
 • சிறந்த திரைக்கதை – Sachi (அய்யப்பனும் கோஷியும்)
 • சிறந்த பாடலாசிரியர் – எங்கடியூர் சந்திரசேகரன் (Randam Naal)
 • சிறந்த இசை அமைப்பாளர் – பி.ஜெயச்சந்திரன் (சுஃபியும் சுஜாதையும்)
 • சிறந்த பின்னணி பாடகர் – பி.கே.சுனில்குமார் (Perfume படத்தில் வரும் சரியதே பாடல்)
 • சிறந்த பின்னணி பாடகி – கே.எஸ்.சித்ரா (Perfume படத்தில் வரும் நீலவானம் பாடல்)
 • சிறந்த திரைப்பட எடிட்டர் – நவ்ஃபல் அப்துல்லா (சமீர்)
 • சிறந்த சவுண்ட் டிசைனர் – ரசூல் பூக்குட்டி (Trance)
 • Most popular film – சுஃபியும் சுஜாதையும்
 • Ruby Jubilee Award – ஹரிகுமார்
 • Chalachithra Ratnam award – கே.ஜி.ஜார்ஜ்

English summary

45 th kerala film critics awards announced for the year 2020. jeo baby pellissery’s the great indian kitchen gets best film award. prithviraj and biju menon shared best actor award.Source link

Related Posts