ஓரமா நின்ன என்னை சாந்தனு கண்டுக்கலை: சாந்தனு பட விழாவில் யோகிபாபு பேச்சு!


சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் எடுத்த படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தபோது சாந்தனு என்னை கண்டு கொள்ளவில்லை, ஆனால் இன்று நான் பிஸியாக இருக்கிறேன் என்றாலும் சாந்தனுவுக்காக இந்த படத்தில் நான் நடித்துக் கொடுத்தேன் என யோகிபாபு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சாந்தனு நடித்த ’முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படத்தின் புரமோஷன் விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய யோகி பாபு ’சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் நான் தினமும் பாக்யராஜ் அவர்களின் வீட்டிற்கு போய் நின்று வாய்ப்பு கேட்பேன். அப்போது அவர் என்னிடம் சொல்கிறேன், கண்டிப்பாக சொல்கிறேன் என்று கூறினார்.

சில நாட்கள் கழித்து ’சித்து பிளஸ் டூ’ என்ற படத்தில் எனக்கு ஒரே ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த காட்சியில் நான் நடித்தது கூட சாந்தனுவுக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. அவர் என்னை கண்டுக்கவே இல்லை. கூட்டத்தோடு கூட்டமாக ஒரே ஒரு காட்சியில் நடித்தேன்.

ஆனால் இன்று நான் பிசியாக இருந்தபோதிலும் சாந்தனு அவர்களின் படத்தின் புரமோஷனுக்காக வந்துள்ளேன். ஒரு பெரிய ஜாம்பவான் அவர்களின் மகன் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்த படத்தில் நடித்தேன். நான் பாக்யராஜ் அவர்களின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய ஒவ்வொரு படத்தையும் நான் விரும்பிப் பார்ப்பேன். அதனால்தான் நான் அவருக்காக சாந்தனு படத்தின் புரமோஷனுக்கு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் சினிமா தொழில் நசிந்து விட்டது. இனிமேலாவது தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைவரும் ஒத்துழைத்து சினிமாவை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.Source link

Related Posts