ஒரு வீடோ நாடோ நிறுவனமோ நின்று நிலைபெறுவது தியாகத்தால்தான்.. வைரமுத்து பக்ரீத் திருநாள் வாழ்த்து! | Poet Vairamuthu wishes for Bakridசென்னை: தியாகத் திருநாளாம் பக்ரீத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இப்ராஹீம் நபிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

ஒரு வீடோ நாடோ நிறுவனமோ
நின்று நிலைபெறுவது
யாரோ ஒருவரின் அல்லது
சிலரின் தியாகத்தால்தான்

அந்த தியாகத்தை
வாழ்வியலாக்கிய ஒருநாள்
பக்ரீத் திருநாள்

உலக
இஸ்லாமிய உறவுகளே!
தியாகத் திருநாளில் நாம்
பேரன்புச் சங்கிலியால்
பிணைந்திருப்போம்

பாசம் ததும்பும்
பக்ரீத் வாழ்த்து.. இவ்வாறு கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.Source link