இஸ்ரேல் சிறையிலிருந்து சினிமா பாணியில் சுரங்கம் தோண்டி தப்பிய பாலஸ்தீன கைதிகள் | Six Palestinians escape from Gilboa jail in Israel


பலத்த பாதுகாப்பு நிறைந்த இஸ்ரேலின் கில்போவா சிறையிலிருந்து பாலஸ்தினத்தை சேர்ந்த 6 சிறை கைதிகள் தப்பிச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ இஸ்ரேலின் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றான கில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்கள் 6 பேர் சிறையிலிருந்து சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்றவர்களில் முன்னாள் தீவிரவாதியும் ஒருவர். திங்கட்கிழமை அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தை சிசிடிவி காட்சி மூலம் இஸ்ரேல் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைக் கைதிகள் தப்பிச் சென்றது ஷாவ்ஷாங்க் ரீடெம்ப்ஷன் ஆங்கில படத்தில் வரும் காட்சிகள் போல் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், காசா பகுதியில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இருப்பிட தளத்தை நோக்கி இஸ்ரேல் ராணூவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து பாலஸ்தீனர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் ஹமாஸ் தீவிரவாதிகளும் இஸ்ரேலின் ஆதிக்கத்துக்கு எதிராக அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Related Posts